ஞானத்தை வென்றிடு- ஆனந்தி

தன்மானம் இல்லா மனம்
தன்னை உணரா(து)....

ஞானத்தை வெல்லா வாழ்வு
நடுநிலை பெறா(து)....

சூழ்நிலை எதுவானாலும்
சுதாரித்துப் பழகு....

ஆழ்கடல் அமைதியாய்
மனதை அடக்கு....

மனம் ரணப்படுகிறதா
விட்டுபிடி அதன் போக்கில்....

பயணதிசையை மட்டும்
தெளிவாய் நோக்கு
பாதை இதுவென புரியும்....

தோல்விக்குள் வலிகளா?
புறந்தள்ளு வலி வழியாகட்டும்
வழி வலிமையாய் மாறட்டும்....

இப்பிரபஞ்சமே உனது
நம்பிக்கையை தூசு தட்டு
குறிக்கோளை உயர்த்து....

உனக்கும் இறக்கை உண்டு
நீ நம்பினால் எழுந்து பற....

உன்னால் முடியாதென்றால்
இங்கு எவராலும் முடியாது....

உன்னை விட உயர்ந்தவரும்
இல்லை.
தாழ்ந்தவரும் இல்லை.

நல்லதோர் வாழ்வுக்கு
பொய் உரைக்காது
ஊரை பழிக்காது
உரக்க சிரிக்காது
தற்கொலைக்கு துணியாது
ஊமையாய் இராது.
நம்பிக்கை துரோகம் செய்திடாது
பெண்களிடம் கண்ணியமாய்.
அன்பாய் அமைதியோடு....

ஞானத்தை வென்றிடு(வென்று எடு)
உன் ஏழாம் அறிவோடு(ஞானத்தோடு).
சொர்க்கத்தின் வழி திறக்கும்.....

எழுதியவர் : ஆனந்தி.ரா (16-Nov-15, 10:53 pm)
பார்வை : 82

மேலே