முதல் முத்தம்

இதழ்கள் பிரித்து
விழிகள் திறந்து
கேட்டு வாங்கிய முத்த சப்தத்தில்
என் நிழல்களும் நிசப்தமாகின
என் நிஜங்கள் நிழல்களாகின...
காதலில் முத்தத்தை வாரி இறைக்கும் வாள்ளலானாலும்
அவள் பார்வையில் நான் என்னமோ கஞ்சனாகத்தான் தெரிகிறேன்...
சுடாத தீயும் நடுங்க வைக்காத குளிரும்
முத்தம் சுவைக்கும் அவள் இதழில் உணர்கிறேன்...
உறங்க விடாத அவள் நினைவில் உறங்குகிறேன்
உளி கொண்டு செதுக்கும் அவள் கனவுகளை என் கண்ணில் சுமந்து..
இதழோரம் கசிந்த எச்சி மிகுதி கிடைக்கவில்லை என்று குழந்தை போல்
அடம்பிடித்துக்கேட்ட கடைசி முத்தம் அதுவே என் முதல் முத்தம்