அரும்புகள்

உறவுக்கு உயிரூட்டிய ..
அரும்பு உன் வருகை ... !!!
வாரிசுக்கு வரமான
மகனே உன் பிறவி ...!!!

இந்நாளில் நீ பிறந்து ...
என்னுள்ளே அரும்பிய ..
அத்தைனையும் அற்புதமே !!!

மனங்களில் மகிழ்வு..
கரங்களில் களிப்பு ..
முகங்களில் முத்தாய்ப்பு ..
தினம் தினம் தித்திப்பு ..!!!

காணாத விழிகளில்
கரைந்தோடும் கண்ணீரில் ...
கவலைகளை கரையேற்றி ...
மகிழ்வுக்கு வித்தானாய் ..!!
அரும்பாகி அர்த்தமானாய் !!!

மனைவியின் கருப்பையில்
அன்று வித்தாகி ...
இன்று வித்தைகள் நிகழ்த்தும்
உன் பாதை... இதோ ஓர் பார்வை !!!

கண்ணில் காண
வரம் கிடந்த நாட்கள்..
3டி தந்தது முதல் அச்சு ..

இரண்டாம் நாள்..
இன்ப விழிகள் ..!!!
நான்காம் நாள்...
நவரச பாவனைகள் !!!

இரண்டாம் மாதம்...
இயற்கை ரசித்தாய் ...!!!
மூன்றாம் மாதம் ...
முழுவதும் மாறினாய் ...!!!
நான்காம் மாதம்..
நகைச்சுவை உணர்த்தினாய் ...!!!

ஆறாம் மாதம் ...
அளவுகள் தகர்த்தாய் ...!!!
ஏழாம் மாதம் ..
எழுந்து காண்பித்தாய் ...!!!

எட்டாம் மாதம் ...
எகிறி தொட்டாய் ...!!!
ஒன்பதாம் மாதம் ...
ஓயாமல் விளையாடினாய் ...!!!

பத்தாம் மாதம் ...
பந்துகள் விரும்பினாய் ...!!!
பதினோராம் மதம் ...
தக்காளி உன் விருந்தாளி !!!

மரக்குதிரை நிற்காமல் ஓடும் ..
"பாவமாம் அது" பசி அமர்த்திய
பாரி வள்ளல் நீ !!!

உன் பறை முழக்கம்...
பத்து மைல் தகர்க்கும் ...!!!
உன் அரை உறக்கம் ...
அத்தனை முறை சாய்க்கும் !!!

ரயிலோடு பேசுவாய் ...
ராகத்தோடு பாடுவாய் ...
மேகம் பார்த்து கற்பனை ...
தாகம் தீர்க்க தென்னை !!!

இருப்பது அரை அடி ...
ஏறுவதோ ஏழு அடி ...!!!
மாந்தோப்பு அது..மரியாதை செய்ய ..
தென்னந்தோப்பு அது..உரிமையோடு உறவாட ...
நீயே ராஜா .... உன் பிள்ளையை ..
நீ ரசிக்கும் வரை !!!

மட்டை பந்தில்
துரத்தும் வீரன்... !!!
சைக்கிள் ரேசில் ...
சகலகலா வல்லவன் ..!!!

ஓட்ட பந்தயம் ...
ஓயாமல் ஜெயிப்பாய் ...!!!
உடற்பயிற்சி உடனே
கற்றுகொண்டாய்... !!!

கிராமம் ரொம்ப பிடிக்கும் ...
ஆடு, மாடு ,கோழி , தோட்டம் ,
ஆற்று மணல் .. சேற்று தண்ணீர் ..
வியர்வை , வீரம் , விவேகம் ...
சொந்தங்கள் அன்பு , பந்தங்கள் பாசம் ...
அனைத்தும் ரசிக்கும் ரசிகன் நீ !!!

ஆங்கிலம் , அறிவியல் , கணினி ,
கடற்கரை , கடைகள் ,
ஆதலால் நகரமும்...
நல்லாவே பிடிக்கும் !!!

நாட்கள் போதாது ...
பக்கங்கள் பத்தாது ...
ஏக்கங்கள் தீராது ...
உன்னை வர்ணிக்க !!!

நண்பர்கள் கூட்டம்
எப்போதும் உன் நாட்டம் ...
நல்லது மகனே ...
நல்ல தோழமை போதும்
நாம் விண்ணை தொட !!!

ஏற்றத்தாழ்வு பாராதே ...
ஏமாற்ற நினைக்காதே ...
எப்போதும் உயர்வாய் எண்ணு ...
உழைப்போடு உன்னதமாய் நீ வாழ !!!

முதல் நாள் பள்ளி ..
முதல் காவலர் உடை ...
முதல் கிறுக்கல் ...
முதல் தட்டச்சு ..
முதல் எழுத்துக்கள் ...
அளவில்லா பூரிப்பு ..
உன் வளர்ச்சி காண ...!!!
முயன்றால் முடியும் தம்பி ...
நடத்தி காட்டு ...!!!
நாங்கள் உன் பக்கம் !!

எங்கள் வாழ்விற்கு வரமாய் ...
உணர்வுக்கு உயிராய் ....
உறவுகளுக்கு உற்றவனாய் ...
உலகை ஆள அரும்பாய் முளைத்த
என் கண்ணா ...
பொக்கிஷம் நீ ..!!!

கவலை மறப்போம்
....உன் புன்னகை கண்டு ..
சண்டைகள் துறப்போம்
....உன் மிரட்டல் கண்டு ...
நன்றிகள் உரைப்போம்
....உன் வளர்ச்சி கண்டு ...
பிள்ளை நிலா நீ ...!!!

நித்தம் நீ நித்திரையில்
நீங்காது தேடுகிறாய் ...
நீ தூங்க.. நாங்கள் விழித்திருக்க ..
உன் தேடலில் உறக்கம் மறக்க ...
அன்பின் ஊற்று நீ ...!!!

ஆம்!!!
எங்கள் அன்பின் ஊற்று நீ ...
எங்கள் பொக்கிஷம் நீ ...
எங்கள் பிள்ளை நிலா நீ ..
அரும்பே ...அத்தைனையும் நீதான் ..
அர்த்தமும் நீ தான் !!!

எழுதியவர் : முரசொலிசெல்வன் கருணாநிதி (17-Nov-15, 9:15 am)
சேர்த்தது : Muras
Tanglish : arumpukal
பார்வை : 386

சிறந்த கவிதைகள்

மேலே