என் தேவதை
ஒரு ஓரம் அமர்ந்து
உன் கைக்கோர்த்து
காதோரம் கூந்தலை வருடி
உன் முகம் பார்த்த நொடி
உணர்கிறேன் என் காதலை......
உன் இமைகள் நடனமாட
உன் புருவங்கள் சுருங்க
உன் இதழ்கள் மலர
தேன் தெறிக்கும் நெற்றியில்
முத்தமிடுகிறேன் என் தேவதையை.......
உன் சிணுங்கள் சங்கீதமாக
உன் உளறல்கள் இசையாக
உன் சுவாசங்கள் தென்றலாக
உணர்கிறேன் உறங்காமல் நான்
உன்னை ரசிக்கிறேன் என்று!!!!!!!!!!!!!!!!!!!!