சிற்றிடையாளுடன் சிறுநடை

சிற்றிடையாளுடன்
சிறுநடை சென்றதில்
சினந்தான் மிச்சம்
கணநேர பொழுதில்
கரைந்து தீர்ந்திட்ட
கஜதூரத்தின் மீதும்
வழக்கத்துக்கு மாறாய்
வழிவிட்டு வந்திட்ட
வாகனத்தின் மீதும்
தொடுகின்ற தூரத்தில்
தொல்லையாய் தொடர்ந்திட்ட
தோழனின் மீதும்
விருப்பமிலினும்
விரைந்திட வைத்திட்ட
வேலைப்பளுவின் மீதும்
அற்ப காரனமிதுக்கு
அரைஜாமத்தில் கவிபாடும்
அசட்டு மதியின் மீதும்
:)