ஏனோ

நான் என்ற உதடுகள்
நம்மை சேர்ப்பது ஏனோ ?
என்னை ரசித்த விழிகள்
உன்னை ரசித்தது ஏனோ ?
என் கை விரல்கள்
உன் கரம் கோர்த்து ஏனோ ?
என் கால் பாதங்கள்
உன் சுவடுகளில் ஏனோ?

உந்தன் அடர்ந்த கூந்தலை
என் விரல்கள் கலைத்திட!!!!
உந்தன் மூக்கின் நுனியில்
எந்தன் முத்தங்கள் பதிந்திட!!!!
உந்தன் முறுக்கு மீசையை
எந்தன் விரல்கள் முறுக்கிட!!!!
உந்தன் சிகரட் புகையை
என் சுவாசங்கள் சுவாசித்திட!!!!

இரு இரு விழிகளின் நடனம் இங்கே!!!
இரு இரு உடல்களின் ஊடல் இங்கே !!!

நீ செய்யும் குறும்புகளில்
நான் உன்னை கோவித்திட...
நீ பின்னால் அணைக்கையில்
நான் புன்னகை பூத்திடுவேனே !!!!
நீ செய்யும் செய்கையை
நான் மெல்ல ரசித்திட......
நீ அறியாதவனாய் நகர்கையில்
நான் உள்ளம் மகிழ்கிறேனே!!!!

நீ என்னை பார்க்கையில்
இதயம் நிற்ப்பது ஏனோ?
நீ என்னை தொடுகையில்
தேகம் சிலிர்ப்பது ஏனோ ?
நீ என்னை அணைக்கையில்
ஆயுள் நீள்வது ஏனோ?
நீ என்னை தீண்டையில்
உயிர் கெஞ்சுவது ஏனோ?

நம் புணரும் காதல்
நாட்டியம் ஆனதோ??
நம் சேரும் நேரம்
காமம் ஆனதோ ???
நம் சிந்தும் சிணுங்கள்
சங்கிதம் ஆனதோ ???
நம் கூடல் பொழுது
நாடகம் ஆனதோ ???

எழுதியவர் : Safeena (17-Nov-15, 11:16 am)
சேர்த்தது : Safeena Begam
Tanglish : eno
பார்வை : 98

மேலே