விடியலின் கொடுமை

விடியலின் கொடுமை

ஒளிந்து விளையாடும்
கனவுக்கு
தெரியாது
விடியலின் கொடுமை !

தனக்குத் தானே
பேசி மகிழும்
கற்பனைக்கு
தெரியாது
காகிதத்தின் வலிமை !

இரவு பகல் பாரது
இதயம் ஏங்கும்
அழிவுக்கு
தெரியாது
கல்லறையின் பெருமை !

நினைவுகளை சுமந்து
கனவுகளில் பறந்து
இதயத்தில் அமரும்
காதலுக்கு
தெரியாது
கண்ணீரின் இனிமை !

தெரிந்தும் தெரியாமல்
அறிந்தும் அறியாமல்
அங்கிங்கும் வாடும்
உறவுக்கு
தெரியாது
காலத்தின் கடமை !

எழுதியவர் : ஹிஷாலீ (17-Nov-15, 11:27 am)
Tanglish : vidiyalin kodumai
பார்வை : 51

மேலே