மகிழ்ச்சியின் முயற்சி
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்ப யார் உளர்?
நான் யாரென்று நினைகின்றீரா... என் பெயர் மகிழ்ச்சி.
பல்லாயிரம் ஆண்டுகள் நிலையாய் வாழ போராடும் போராளி
அகதியாய் இருக்கும் எனக்கு என்றும் இல்லை துக்கம்
ஏனெனில் என் பெயர் மகிழ்ச்சி.
அறிவுரை எவருக்கும் பிடிக்காது... நானே முயற்சி செய்கிறேன்
நானும் வாழ்வேன் மற்றவரையும் வாழ அனுமதிப்பேன்
வலிமையான எண்ணங்கள் அறிந்து நேர்மறையாக சிந்திப்பேன்
தைரியத்தைக் கைக்கொண்டு சிக்கல்களைச் சமாளிப்பேன்
தோல்வியில் துவளாமல் உற்சாகமாய் வேலைகள் செய்திடுவேன்
பொறாமை கோபம் வந்தாலே குப்பையில் கழிவாய் போட்டிடுவேன்
முடியும் என்ற எண்ணத்தை மனதில் வைத்தே செயல்படுவேன்
தியானம் மற்றும் உடற்பயிற்சி பிரியமாய் தினமும் செய்வேனே
உறவினர் நண்பர் அனைவருக்கும் அன்பும் நேரமும் செலவிடுவேன்
இயற்கையை மதித்தே கும்பிடுவேன் அமைதியை என்றும் விரும்பிடுவேன்
கல்வி வளர்ந்திட உதவிடுவேன் முதியவரை என்றும் மதித்திடுவேன்
மனிதரில் பிரிவினை இல்லாமல் அன்புடன் வாழ்வதை விரும்பிடுவேன்
துரோகம் கவலை அனைத்தையும் அலட்சியம் செய்திடுவேன்
குழந்தைகளை அன்பு செய்தே கற்க வைப்பேன் வாழ்க்கைக் கல்வி
பெண்கள் அன்பு தெய்வங்கள் அவர்களை மதித்தே நடந்திடுவேன்
ஆண்கள் பொறுப்பின் சிகரங்கள் அவர்களுடனே இருந்திடுவேன்
அரசியல் என்றும் மக்களுக்கே ஊழியம் செய்திட முயன்றிடுவேன்
ஊழல் இல்லா அரசியலும் வாழ்க்கைக்குதவும் கல்வியுமே
நாட்டில் நிலவிட முயன்றிடுவேன்
போதையில்லா பெருவாழ்வு பஞ்சமில்லா நல்வாழ்வு
கலப்படமில்லா உணவுகள் கிடைத்திட நானும் முயன்றிடுவேன்
என்னை அனைவரும் விரும்பிடுங்கள்
இயற்கை அமைதி அழகுடனே சிறந்தே வாழ்ந்திடுங்கள்
என் பெயர் மகிழ்ச்சி இது என் முயற்சி.