அரும்புகள்

அரும்புகள்

முத்தம் கொடுத்து
முகத்தோடு முகம்
சேர்த்து வைத்து
உத்தரிகம் தள்ளி
உடை அவிழ்த்து
நித்தமும் விளையாடும்
நித்திலப் பூக்கள்

கற்ற பெரியோரையும்
கைநீட்டி ஏற்க வைப்பார்
சிற்றில் சிதைப்பார்
சிறுகண் சிமிட்டுவார்
மட்டிலா மகிழ்ச்சியை
மற்றவர்க்கு அளிப்பார்.

தேவத் தலங்களுக்கு
நாம் செலு முன்னர்
அவர் முன் போய்
பாவமெலாம் தீர்த்து
பலன் கொடுப்பார்
பாலகர் தெய்வமாவார்.

முன்பிருந்த பகை போக்கி
அன்பரென ஆக்கிடுவார்
முன்பின் தெரியாதோறும்
முறுவல் செய்திடுவார்.

வேடிக்கை செய்வார்
வேற்று மொழி பேசிடுவார்
நையாண்டி நக்கல்
நளினமாய் செய்திடுவார்.

குதிப்பார், மிதிப்பார்
பொன் வண்டை
அண்டிச் சிறுவர்
எடுத்து ஆட்டுதலால்
அல்லாது மற்ற
வண்டு விளையாட்டை
பிறர் ஆடக் கூடுமோ

ஐ பாடும் டாப்லெட்டும்
கை வந்த கலையாக
நாமறியு முன்னரே
தானியக்கிக் காட்டுவார்
இரும்பு நெஞ்சையும்
பிளந்திடும் இந்த
அரும்புகள் செய்திடும்
குறும்புகள் ஆயிரம்.

எழுதியவர் : போட்டிக் கவிதை (17-Nov-15, 3:24 pm)
Tanglish : arumpukal
பார்வை : 47

மேலே