கன்னியின் நினைவு
நித்தம் நித்தம் உன் நினைவு
நெஞ்சு குழி காயுதடி!
ஆறேழு நாளாகவே
பச்சத் தண்ணி இறங்களடி!
மூவேளை உண்ணுமுன்பு
இறைகுடலும் மூடுதடி!
எண்ணமெல்லாம் உன்னோடு
கால் இஷ்டப்படி நடக்குறேனே!
பார்க்கிற பார்வை நீயாகவே
யாரென்றும் அறியாமலே பேசுறேனே!
பேசுகின்ற பேச்செல்லாம்
உன் பேரத் தவிர வேறொண்ணுமில்லே!
உறவு வந்து சொன்ன போதும்
பாவி நெஞ்சம் ஒத்துக்கல!
படிப்படியாய் கறையுறேனே
கன்னி உன்னை காணாமலே!