உரிமைகள் பறிக்கப்படும்

உரிமைகள் இங்கு
சரிசமம் என்பார்
எல்லாம் ஏட்டினிலே

பிடித்த சட்டையை
போடக் கூடாதென
அம்மா சொல்வதிலே

அவனுடன் சேராதே
ஆட்டம் போடாதே என
அப்பா சொல்வதிலே

ரசிக்கும் நடிகனின்
படத்தைப் பார்த்திட
அனுமதி மறுக்கையிலே

வராத படிப்பை
படித்திட என்னை
பெற்றோர் உறுத்தையிலே

மனதுக்குப் பிடித்த
பெண்ணை மணக்க
சாதி தடுக்கையிலே

ஒன்று போதும்
என்று இருக்க
இன்னொன்று பிறக்கையிலே

பதவி உயர்வு
தட்டிப் பறித்துப்
பிறருக்குச் செல்கையிலே

பாகப் பிரிவினை
என்று சொல்லி
இருப்பதை இழக்கையிலே

நட்பு வேண்டாம்
நல்லவர் வேண்டாமென
தாரம் சொல்கையிலே

கவிதை எழுதிக்
கேட்பார் இன்றி
கிழிந்து போகையிலே

பாவ புண்ணியம்
பார்த்து நடந்தும்
படுகுழி விழுகையிலே

உரிமைகள் இங்கு
சரிசமம் என்பார்
எல்லாம் ஏட்டினிலே
உரிமைகள் பறித்து
அடிமைகள் ஆக்குவது
வழக்கம் நாட்டினிலே

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (17-Nov-15, 5:08 pm)
பார்வை : 65

மேலே