உண்மை சில நேரம் சுடத்தான் செய்யும்
படிக்காத மேதைகள்
வாழ்ந்த நாட்டில்
படித்தால் தான் மேதையென்று
ஏன் நம்பினோம்?
படித்தால் மட்டும் போதுமா?
ஏட்டுச்சுரைக்காய்
கூட்டுக்குதவுமா?
அவசர கதியில்
ஆணையிட்டவர்கள்
அறிவு படைத்தவர்கள்
அத்தனை பேரின் கதி
இன்று அதோ கதி தான்.
நதிகளில் வீடுகள் யார் குற்றம்?
நிஜத்தை மறைத்து நிலத்தை விற்றவர் குற்றமா?
அந்த நிழலை நம்பி மோசம் போகுமுன்
நிதர்சனத்தை அறியாதவர் செய்த குற்றமா?
அறிவு என்பது
அனுபவத்தில் அடக்கம்
அறிவை விடுத்து
அனுபவத்தை தடுத்து
செய்த செயலின் சாயம் -
இன்று வெளுத்து விட்டது,
சென்னையே விழுந்து விட்டது...
கிராமம் காலியானது
நகரம் நிறைந்தது
நாடு வேண்டி
காடு அழிந்தது.
தேவை வேறு
தீர்வு வேறு
நிவாரணம் வேறு
நிவர்த்தி வேறு
சோறு தேவைக்கு
ஆறு தீர்வு.
ஆறு தேவைக்கு
மழை தீர்வு.
மழை தேவைக்கு
மரம் தீர்வு.
மரம் தேவைக்கு
வனம் தீர்வு
வனம் தேவைக்கு
விலங்கு தான் தீர்வு.
மனிதனை மனிதன் தின்றான்,
மறைமுகமாக.
ஆனால் மனிதன்
விலங்கினை வனத்தினை
மரத்தினை மழையினை
இன்னும் எத்தனையையோ
இழந்தான் நேர்முகமாக..
இலங்கையிலிருந்து வந்தவர்கள் அகதிகள் அல்ல,
இன்று இந்த சென்னைவாசிகள் போல்
எங்கும் அகதிகளை கண்டதுண்டோ?
(மன்னிக்கவும், எனக்கும் வருத்தம் தான்,
உண்மை சில நேரம் சுடத்தான் செய்யும்...)