மிஞ்சியவை

அப்பப்பா உனக்கேத்தெரியாமல்
அவன் உச்சி நுகர்வது
எத்தனை சிரமம் தெரியுமா ம்ம்ம்
யாரோ தருகிறார்கள் என்று நம்பி
நான் இழந்ததாய் கூறும்
அத்தனை அன்பையும் காதலையும்
சண்டைகளையும்
எங்கே காணவில்லையே
என்ற தேடல்களையும்
உரிமைகளையும் முத்தங்களையும்
தந்துவிட்டு ,,,எங்கே சொல் ,,,,
நான் அவர்களை மிஞ்சிவிட்டேனா
என்று குழந்தைபோல் அவன் கேட்கின்றபோது
இன்னமும் ஓரிரு ஆயுளேனும்
இப்படியே முட்டாளாய் இருந்துவிடலாமா
என்றிருக்கத்தான் செய்கிறது
என் பித்துக்குளி மனதுக்கு ம்ம்ம்ம்

"பூக்காரன் கவிதைகள் "

எழுதியவர் : அனுசரன் (18-Nov-15, 2:03 am)
பார்வை : 98

மேலே