மணப்பாடு

கடல் மண் பரப்பிய நிலமும்
கடல் பாடும் காற்று ஓசையும்
கொண்ட ஊரு - மணப்பாடு

மணல் காற்றில் வீசும் போது பாட்டிசைப்பது போல்
உள்ளத்தால் இவ்வூர் பெயர்பெற்றது - மணப்பாடு என

வலை வீசி மீன் பிடிப்பதும்
பனை பொருள் கொண்டு பணம் பார்ப்பதும்
இவர்களின் காலம் கடந்த தொழில் ஆகும்...

சிலுவை ஆலயம் பல கொண்ட
இந்த பூமி கிருஸ்தவர்களுக்கு ஒரு
சொர்க்க பூமியாம்...

கட்டு மரம் ஏறி மீனவன் மீன் பிடித்தால்
கரை சேரும் மீனை பிற ஊரு சந்தைகளுக்கு
கொண்டு செல்வதே மிஞ்சிய ஆண்களின் வேலையாகும்...

உள்ளூர் சந்தையில் காய்ந்த மீனையும் கருவாடாக்கி
பணம் பார்ப்பதில் இவ்வூர் பெண்களும் கேட்டிகாரர்களே....

பனை மரம் ஏறி பதநீர் இறக்கி
வெள்ளம் காய்ச்சி கருப்படி செய்வதோடு நின்றுவிடாமல்
மிஞ்சும் பனை ஓலைகளை கூடையாகவும், கைவினைப் பொருட்களாகவும்
மாற்றி மேல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பணம் ஈட்டுவதில்
திறன் படைத்தவர்களே இவ்வூர் நாடார்கள்....

இவ்வூரின் மேடேரிய மணல் திட்டும்
கரை ஒதிங்கிய படகையும்
விரிந்த பெருங்கடலையும்
வானுயர்ந்த பனைமரதையும்
தரைகளில் காயும் கருவாட்டையும்
ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க மாட்டார்கள்
அவர்கள் வாழ்நாள் வரை.......

எழுதியவர் : பிரதீப் ரா (18-Nov-15, 8:37 am)
பார்வை : 173

மேலே