முத்தவகைகள்
நம் இருவருக்கும் இடையில் கிடப்பது
உன் தலையணைதான்
நீ இப்போது ஒரு முத்தத்தோடு
தலையணையைக் கடந்து
என்னிடம் வருவாய் என்றிருக்கிறேன்
இரவுகளைக் கடப்பதெற்கென்றே
மூன்று வகையான
முத்தங்களை வைத்திருக்கிறாய்
உன் முதல்வகை முத்தம்
என் நெற்றிக்கானது...
அதன்பின்னான உடல்வழிப்
பயணங்களின் வழித்தடங்கள்
முன்னும் பின்னும் நீளமாகும்
அடுத்த வகையாக
கன்னத்தில் முத்தமிட்டாயெனில்
பேசிக்கழிக்கும் இரவுகள்
செவிவழி இன்பத்தில்
நிறைந்துவிடும்
இன்றோ என் மாா்பில் முத்தமிட்டதும்
தூங்கிப்போனாய்
உன் மூன்றாவது வகையாக
சன்னமான மஞ்சள் விளக்கொளியில்
உன் முகம் பாா்க்கிறேன்
உதடுகளும் புருவங்களும்
மெது மெதுவாய் அசைகிறது
கனவில் என்னோடு
உன் முதல் வகை முத்தத்தை
துவக்கிவிட்டாய் போலும்….