உள்ளூர் வாத்தியார்

உள்ளூர் வாத்தியார்
************************
அவனுக்கு ஐந்து வயதில் "அ" எழுதி...
ஆரம்பித்தது பள்ளிப் பருவம்..
இன்றுவரை..
ஈடுபாட்டுடன் படித்த அவனுக்கு...
உள்ளூரிலேயே வேலை கிடைத்தது...
ஊரைவிட்டு செல்ல மனமில்லை...
எதற்கு என்று கேட்டால்...
ஏன் என்று புரியவில்லை என்பான்...
ஐயம் வந்துவிட்டதோ,
உனக்கே உன் நம்பிக்கையில்...
என்பார் பலர்
ஒழுங்கா படித்த அவனுக்கு...
ஓரளவு வருமானம் வந்தால் போதுமென்று...
ஔவையார் ஆரம்ப பாடசாலையில் படித்த அவன்...
ஃ எழுத்தில் வரும் ஒரு புள்ளியை...
மற்றவர் கேள்விக்கு,
முற்றுப்புள்ளியாய் வைத்து...
இனிவரும் குழந்தைகளுக்கு...
"அ" எழுத சொல்லிக்கொடுத்து...!
ஆரம்பிக்கிறான் தன் வாழ்க்கையை...!!
உள்ளுர் வாத்தியாரக...!!!
இவண்
✒க.முரளி (spark MRL K)