வெற்றி என்ற மா மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே

வெற்றி என்ற மா மரத்துக்கு விதையாவது தோல்வியின் அனுபவங்களே

மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டா என்பது நமக்கு தெரியாது ஆனால் நிச்சயம் தோல்விக்கு பிறகும் வாழ்வு உண்டு

கடந்தது நதி நடந்தது விதி இறந்தது பினி இனி நடப்பதை நினை துணிந்து நில் எழுந்து நில் தொடர்ந்து செல்

ஆண்டாண்டு அழுதாழும் மாண்டவர் வருவதில்லை ஆற்றிலே போன நீர் திரும்புவதில்லை புது மழை வரும் புது நீர் வரும் புது உயிர்கள் பிறக்கும் புது வாழ்வு மலரும் புதிது புதிதாக தொடர் தொடராக வாழ்வு நீண்ட தொலை காட்சி தொடராக தொடரத்தானே போகிகிறது.உடல்தானே முற்றுகிறது முடிகிறது உலகம் என்றும் முற்றுவதில்லை முடிவதில்லை
கருவறை தொடங்கி கல்லறை வரை எத்தனை எத்தனை இழப்புகள் நாம் அடைந்த கணக்கை விட இழந்த கணக்கு அதிகம்.அல்லவா ?

வெற்றி இழப்பு,பொருள் இழப்பு,பணம் இழப்பு,மானம் இழப்பு,உறுப்பு இழப்பு,உயிர் இழப்பு,இழப்புகளுக்கு கணக்கேயில்லே தோல்விகளுக்கு முடிவேயில்லை.ஆனால் நாம் எதை இழந்தோம் நாம் எதையாவது கொன்டு வந்தாமோ ? இங்கிருந்து தானே எடுத்து கொண்டோம் ஆசை பட்டாய் அனுபவித்தாய் விட்டு விட்டு கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்கிறானே நியாயம்தானே.
தோல்வி மனப்பான்மையும்,தன்னை தானே தோற்கடித்து கொள்வதும்,எதிர்மறையான சிந்தனைகளும்,தோல்வி பற்றிய அச்சமும் தோல்விக்கு பிறகு அவமான உணர்வும் மனசோர்வும்,தாழ்வு மனபான்மையும் தன்னம்பிக்கை குறைவும்,தற்கொலை முயல்வும் போன்ற பல மன நல பாதிப்புகள் ஆபத்தானவை.ஒருவரது திறமையையும்,செயல் திறனையும் முடக்க கூடியது.கல்வி,வேலை, நட்புறவு,உடலுறவு போன்ற பல அத்யாவசய தினசரி நடவடிக்கைகளையும் பாதிக்ககூடியது.எனவே தோல்வி என்பதும் இழப்பு என்பதும் தவிர்க்க முடியாதது ஆனால் தாங்க கூடியது என்பது தெளிவாக உணரப்பட வேண்டும்.அதே போல் தோல்வியும்,இழப்பும் நிலையானதும் நிரந்தரமானதும் அல்ல அது ஒரு சுழற்சி மீண்டும் லாபமும் வெற்றியும் உறவும் அன்பும்,பதவியும்,பொருளும் ஏதாவதொரு மாற்று வழியாக நாம் வெல்வோம் என்ற நம்பிக்கையும் முயற்சியும் தொடர வேண்டும்.

உலக இயல்பும்,வரலாறுகளும்,ஆழ்ந்த சுய அனுபவங்களும் பெற்றவரதுஆலோசனைகளும் அறிவுரைகளும் வாழ்வின் நுட்பமான நுணுக்கமான செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.

.நாம் ஒரு செய்தியை நுனுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உலகம் பல ஆயிரம் விதமான நுட்பமான திறமைகளை எதிர்பார்க்கிறது எல்லா திறன்களும் எல்லாமனிதரிடமும் இருக்க வாய்ப்பில்லை.உதாரணமாக உலோகங்கள் மற்றும்அதன் கலவைகளிடம் நாம் பல இயல்பியல் குணங்களை எதிர்பார்க்கிறோம் சில குணங்கள் சில உபயோகங்கள் உள்ளது ஆனால் அதுவே சில இடங்களுக்கு உபயோகமில்லாது போய் விடுகிறது உதாரணமாக வன்மையான இரும்பும் மென்மையான தங்கமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களை உடையவை அவற்றின் உபயோகத்துக்கு தகுந்த மாதிரியும் புகழும் விலையும் நிர்ணயிக்கப் படுகிறது.இதே மாதிரியாக மனிதன் பழக்கப்படுத்தும் விலங்குகளும் அமைகின்றது.பூனையும் ஆனையும் அதன் புகழும் விலையும் குணத்துக்கு தகுந்த மாதிரி அமைகிறது.இது இயல்பான மனித சமுதாய அமைப்பிலும் காணப்படுகிறது உடல் உழைபாளிகளை விட அறிவு ஜீவிகள் புகழும் பணமும் அடைகிறார்கள் ஆனால் இயற்கையின் படைப்பை நாம் குறை கூற முடியாது. உடலின் ஒவ்வொரு அங்கமும் போல யாவரும் அத்யாவசயமானவர்கள்.இதயக் குழாயாகட்டும் மலக்குடலாகட்டும் இரண்டுமே முக்யமானவை புகழும் இக‌ழும் தற்கலிகமானவை..தெரு கூட்டுபவர் முதல் தேசிய கொடி நாட்டுபவர் வரை கொள்கையளவில் சமமே ஆனால் புகழிலும் பொருளிலும் சிலர் உயர்வடைவது உலக இயல்பு.மெல்ல மெல்ல இந்த இடைவெளி குறைந்து சமதர்ம சமுதாயம் மலரும்.எனவே வெற்றி தோல்வி என்பது நம்மை தாண்டி பல நூறு நுட்பமான பிண்ணனி உண்டு என உணர வேண்டும்.அதை பயின்று மென் மேலும் உயர முயல வேண்டும்.தன்னைத்தானே நொந்து கொள்வது தவறு.அதற்காக இல்லாத ஒரு காரணத்தை சொல்லி தன்னை ஏமாற்றி கொள்வதும் தவறு.நமது தெளிவான சிந்தனைகளால் எதிர்பாராத ஏமாற்றத்திற்கும் தயாராக வேண்டும் எமாற்றத்தை ஏற்று எதிர்த்துபோராடவும் தயாராக வேண்டும்.தோல்விக்கு பின் தோல்வி மனப்பான்மை தாழ்வு மனப்பான்மை துயரம் சோர்வு தளர்வு விரக்தி சுய பச்சாதாபம் குற்ற உண்ர்வு தன்னம்பிக்கை குறைவு ஏற்படுவது இயல்பு உடல் காயத்தை விட மனக்காயத்தின் வலி அதிகம். ஆனால் வீரர்கள் தமது முயற்சியால் சுய பயிற்சியால் இரு விதமான காயங்களையும் தாங்கும் வலிமையை வளரித்து கொள்கிறார்கள்.தோற்றவர் கூட வெல்லலாம்துவண்டவர் என்றும் வெல்லமுடியாதுமாண்டவர் கூட மீளலாம்சோர்ந்தவர் என்றும் எழ முடியாதுநாளை நமதே வெற்றி நமதே என்ற ஜெய ஜெய கோஷங்கள் உற்சாகமூட்டும் பானங்கள்.தன்னம்பிக்கையுள்ள தலைவர்கள் ஊக்க மருந்துகள் ஊக்கமூட்டும் எழுத்துக்கள் பேச்சுக்கள்,கவிதைகள் காவ்யங்கள் யாவும் அற்புதமான மருந்துகள்.பெற்றோர் உற்றோர் ஆசிரியர் நண்பர் யாவரும் ஊட்டும் நம்பிக்கை வார்த்தைகள் மனம்என்றமரம் செழித்து வளர போடப்படும் உரங்கள்.மாறாக வதைகளும் வசைகளும் குறை கூறலும் குற்றம் சாட்டுதலும் இழிவுபடுத்தலும் அழிவு தரும் வழி முறைகளாகும் இந்த முறைகளை ஆசிரியர் பெற்றோர் உற்றார் அயலார் அனைவரும் கை விடுவது மிக ந்ல்லது.எனவே தோல்வியை விட பிறரது விமர்சனங்களுக்கு வேதனைப்படுவதே ஆபத்தானது ஆகவே மற்றவர் யாவரும் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான மற்றும் ஊக்கமளிக்கும் உற்சாகவார்த்தைகளை கூறுவது நல்லது.வென்றவரை கை தட்டி பாராட்டுவோம் தோற்றவரை கை தூக்கி ஆற்றுபடுத்துவோம்.வென்றவரை தோள் தட்டி ஊக்கபடுத்துவோம்பிறகு தோற்றவரை தோள் நிமிர்த்த பாடுபடுவோம்.எனவே தோல்வியை தாங்கும் மனபக்குவம் மிக அவசியம் மேலும் பிறரது தவறான விமர்சனங்களை மறப்பதும் மிகமிக அவசியம்.இறந்த பின் post martum செய்வது போல தோல்விக்கு பின் தெளிவான சுய ஆலோசனை சுயபரிசோதனை செய்வது அவசியம்.நடு நிலையான ஆராய்வில் ந‌மது மீது குறைகள் தவறுகள் இருந்தால் முழுமனதோடு ஏற்றுகொண்டு அதை மாற்ற முயல்வோம்.அல்லது நம்மை மீறிய இடம்,காலம், நேரம்,சூழல்,அதிட்டம்,போன்றவை காரணமாக இருந்தால் மீண்டும் முழு உத்வேகத்துடன் மறு முயற்சி செய்வோம்.பல நேரங்களில் நமக்கு நம்பிக்கையான ந்ண்பர் உறவினர் கற்றோர் மற்றோரிடம்ஆலோசனை கேட்பது தவறோ,பலவீனமோ அல்ல. நமக்கு புலப்படாத ஒரு பெரிய விஷயம் அவர்களுக்கு தெரியலாம்.இதனாலமீண்டும் வெற்றி பெறலாம்.

எழுதியவர் : தொகுப்பு பாண்டியன் (20-Nov-15, 4:35 pm)
பார்வை : 853

சிறந்த கட்டுரைகள்

மேலே