புவி வெப்பமயமாதல்-சென்னையின் வெள்ளம்

புவியின் சராசரி வெப்பநிலை படிப்படியாக உயர்வதை "புவி வெப்பமயமாதல்" என்கிறோம். இது பசுமை வாயுக்கள் (CO2-82%, Methane-10%, Nitrous Oxide-5% and Fluorinated Gas-3%) புவியில் அதிகமாவதால் இந்த புவி மயமாதல் மாற்றம் நிகழ்கிறது, மேலும், இது ஒரு நிரந்தர மாற்றம் ஆகும். இதனால் ஒவ்வொரு இடத்துக்கு தக்கவாறு பாதிப்புகள் இருக்கும்.
1. புவியில் தாறுமாறான, அதிக வெப்ப நிலை
2. பனி பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும்
3. பருவநிலை மாற்றம் ஏற்பட்டு கட்டுகடங்காத, வழக்கத்திற்கு மாறான அதிக மழை, அதிக வெயில்
4. பாலைவனமாதல், கடும் வறட்சி
5. வெள்ளம், வெப்ப காற்று, கடும் பனி பொழிவு
மேற்கண்ட விளைவுகளால் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிரிழக்கும் அபாயம் நேரிடலாம்!!

இதனால்தான் உலக நாடுகள் எல்லாம் புகையில்லா பசுமை திட்டத்தை முன் வைக்கின்றன. வாகன புகைவிடுதல் மற்றும் மாசு அடைந்த காற்றில், சென்னை டெல்லி, கொல்கத்தாவுக்கு அடுத்த இடத்தில உள்ளது.

இதன் தாக்கம் இப்போது சென்னையில் தெளிவாக தெரிகிறது. வழக்கத்திற்கு அதிக மழை, உடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், மடுவு எல்லாம் மறைந்து, புது புது ஏரியாக்கள் உருவானதன் விளைவு இந்த வெள்ள பெருக்கு.

புகை விடும் வாகனங்களையும், குப்பை, நிலக்கரி எரியூட்டுவதையும், குறைப்போம், இப்புவியை காப்போம், எதிகால தலைமுறைக்கு பசுமையான புவியை பரிசளிப்போம் !!!

எழுதியவர் : ஆ. க. முருகன் (20-Nov-15, 3:58 pm)
சேர்த்தது : ஆ க முருகன்
பார்வை : 928

மேலே