கண்ணீர் சொல்லும் என் காதலை 555

உயிரானவளே...

குளத்தில் பூத்து குலுங்கும்
தாமரையை கண்டு ரசித்து...

என்னிடம் கேட்டாய் ஆசையோடு
பறித்துகொடுதேன்...

அன்போடு முத்தம் பதித்தாய்
எனக்கும் மலருக்கும்...

இன்று என் இதயமென்னும்
குளத்தில்...

உன் நினைவுகள் மட்டுமே
பூத்து குலுங்குதடி...

என் காதலை உனக்கு புரியவைக்க
நினைக்கும் போதெல்லாம்...

நீ புரிய வைக்கிறாய் உனக்குள்
நான் இல்லையென்று...

என் விழிகள் இதுவரை
கலங்கியதில்லை...

இன்று கலங்குதடி உன்னை மட்டும்
வேண்டுமென்று உனக்காக...

நிச்சயம் என் விழிநீர் உனக்கு
என் காதலை புரியவைக்கும்...

என்றாவது ஒருநாள்
அன்று நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Nov-15, 5:38 pm)
பார்வை : 917

மேலே