குடிக்காதடா
குடிக்காதடா... குடிக்காதடா மனிதா - நீ
குடிச்சியினா குடல் அழுகிச் செத்துருவடா...
குடும்பத்த கொஞ்சம் நெனச்சிப் பாருடா..
குடிக்கிற காச தினம் சேர்த்து வையுடா... (குடிக்காதடா...)
குடி குடியைக் கெடுக்கும்னு உனக்குத் தெரியாதா?
கூடி நின்னு குடிச்சா அது உடலைக் கெடுக்காதா?
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு புரியாதா?
அதை மாற்றத்தான் உன்னால் முடியாதா? (குடிக்காதடா...)
குடிப்பதிலே என்ன சாதனை கண்டாய்?
குடும்பத்தையும் குதூகலத்தையும் வீதியில் நிறுத்துகிறாய்...
சேர்த்து வைத்த செல்வத்தையும் இழக்கிறாய்...
தினம்தினம் செத்துப் பிழைக்கிறாய்.... (குடிக்காதடா...)
கவலையில் நீ குடிச்சா
கஷ்டப்படும் உன் குடிசை....
காச சேர்த்துவச்சா
காக்கா, குருவிகூட கேட்கும் உன் பேச்சை... (குடிக்காதடா...)
இன்றே குடிப்பதை நிறுத்திக்கோ...
இனி இளநீரும் பழச்சாறும் சாப்பிட பழகிக்கோ...
இறைவன் கொடுத்த உடலை ஆரோக்கியமா வச்சுக்கோ...
இல்லறத்தை நல்லறமாய் பாத்துக்கோ! (குடிக்காதடா...)