நவீனம்

பணத்தை காட்டி
குணத்தை கொன்றது
மோகம் வலைவீசி
இளமை தின்றது
நவீனம் பேசி
நாகரீகம் ஒதுக்கியது
மருந்துகள் கொடுத்து
நோய்தான் அதிகரித்தது
கணிசம் பேசி
கவனம் கொன்றது
அறிவுபெயர் கூறி
தாய்மொழி இகழ்ந்தது
எதிர்காலம் பயம்காட்டி
நிகழ்காலம் அழித்தது
குளிர்பானருசி காட்டி
ஆற்றை குடித்தது
தன்னலம் என்பதையே
பொதுகுணம்மாக்கிற்று
சொற்ப காரணங்காட்டி
இறைவனையே மறுத்தது

எழுதியவர் : அர்ஷத் (21-Nov-15, 4:10 pm)
Tanglish : naveenam
பார்வை : 237

மேலே