உனக்காக காத்திருந்தேன் காத்திருக்கிறேன் காத்திருப்பேன்

உள்ளத்தில் பல ஆசைகளை சுமந்து
அதை கற்பனை உலகில் அனுபவித்து
நிஜ உலகில் எந்திரமாக வாழ்ந்த எனக்கு

பழைமையான இந்த உலகத்தை
புதுமையாக எனக்கு அறிமுக படுத்தியவள்
புரியாத உன் மொழியலும்
உன் நேசத்தை புரிய வைத்தவள்
நிஜ வாழ்க்கையை
நிஜமாக வாழ கற்று கொடுத்தவள்
கோவத்திலும் பாசம் உண்டு
என்பதை உணர வைத்தவள்

எல்லா இன்பங்களையும் எனக்கு
கொடுத்து விட்டு
அவற்றை ரசிக்கும்
என் இதயத்தை மட்டும்
எடுத்து சென்று விட்டாள் ...
நீ கொடுத்தது சுகமா சோகமா
என்பதை கூட தெரிந்து கொள்ள முடியவில்லை ..
தேடி தேடி அலைகிறேன் என் நினைவலைகளில்
உன் முகத்தை
கொடுத்து விடு என் இதயத்தை
நீ கொடுத்த இன்பங்களை அனுபவிக்க ஏங்குகிறேன் ..
இந்த நிஜ உலகம் வேண்டாம்
என் கனவுலகம் போதும் ..
அதிலாவது என் இதயத்தோடு
நீ வருவாய் என
உனக்காக காத்திருந்தேன்
உனக்காக காத்திருக்கிறேன்
உனக்காக காத்திருப்பேன் ......

எழுதியவர் : செபாஸ்டின் லீலாஆனந்தம் (21-Nov-15, 9:09 pm)
பார்வை : 697

மேலே