நிலமீட்பு போராட்டம்

வடிந்த நீரெல்லாம்
வான் தந்தது!
வழி இல்லை என்றே
ஊர் வந்தது!
அழுத விவசாயிக்கு
எழுத தெறியாது!
எழுதுகிறேன் அவன்
ஏக்கத்தை!
ஏரிகள் இடமிழந்து
ஆறுகள் தடமிழந்து
முகவரி தேடுகின்ற
முதல் மழை கண்டு!
ஏங்குகிறான் என்
விவசாயி!
எங்கோ பெய்யுதேனு!
வந்த மழை தந்த பதில்
வருவேன் ஆறாக!
ஆக்கிரமித்தோர்
அழுதபின்பு!
இது நீர் செய்யும்
நிலமீட்பு போராட்டம்!
-சக்தி

எழுதியவர் : சக்தி (22-Nov-15, 12:46 pm)
பார்வை : 120

மேலே