மறைவின் தொடக்கம்
தொடுவானம் தாண்டி
ஓடிய நான் சட்டென ஒரு
துள்ளலில் பறக்கவும்
தொடங்கி விடுகிறேன்
எப்படியோ, முளைத்துக்
கொண்ட சிறகில் வாழ்க்கையின்
வண்ணம் உதிரத் தொடங்குகையில்
வானம் நீலமல்ல நீளம்
பிரபஞ்சம் திறக்கும் கதவில்
ஜன்னல்கள் முளைக்கத் தொடங்குகிறது
கவனிக்கவே முடியாத ஜன்னல் ஒன்றில்
ஒரு வளைக்கரம் விரல் அசைப்பதில்
ஒரு வெளிச்சம் தீண்டும் இறகொன்றை
உள் வாங்காமலே கடந்து விடுகிறேன்
பூமி புள்ளியாகி மறையத்
தொடங்கியிருக்கிறது
யாத்ரா