செய்ய பா

செவ்வாய்க்கு ஓர் வெண்பா எழுதப்போனேன்
சிரித்தது கோள்
செவிதழுக்கு ஒரு வெண்பா எழுதப்போனேன்
சிரித்தாள் பாவை
செவ்வானத்திற்கு ஒரு வெண்பா எழுதப்போனேன்
இல்லை இப்போது என்றது
செந்தாமரைக்கு ஒரு வெண்பா எழுதப்போனேன்
மூடியது மடலை
செந்தமிழில் செய்ய பா சொல்லவில்லையே
என்ன செய்ய ?
பொய்யில் ஒரு புதுக் கவிதை செய்தேன்
புன்னகை பூத்தன !
----கவின் சாரலன்
செய்ய ---சிவப்பான