முழு நிலவு

திசைகாட்டும் அன்னையின் கைவிரல்கள்

பிள்ளைக்கு வரைந்த ஓவியம் நான்...!

தெரு ஓரம் ஒளிவிளக்கும் நான்...!

தேடுபவரின் கண்களுக்கு கரைபவனும் நான்...!

தோற்றங்களின் நிழல்களை பிரிப்பவன் நான்...!

தோல்வியுற்ற உள்ளங்களுக்கு வளர்பிறையும் நான்..!

ஆற்றங்கரையில் பிறப்பவனும் நான்...!

ஆட்டங்காட்டும் அலைகளில் மறைபவனும் நான்...!

கனவுகளின் கடல் ஓரம் கதவும் நான்...!

களைந்து போனால் நினைவுகளின் வாசலும் நான்...!

தனிமையில் பேசுபவர்களின் பாதையும் நான்...!

தன்னை மறந்து அழுபவழரின் கவிதையும் நான்...!

எழுதியவர் : காந்தி (22-Nov-15, 5:00 pm)
Tanglish : muzu nilavu
பார்வை : 244

மேலே