தாய்ப் பால் தமிழ்ப் பால்

ஆரம்ப அழுகையில் அள்ளி அணைத்து
அன்னை எனக்கு ஊட்டியது தாய்ப்பால் !
அம்மா அம்மா என்று சொல்லென்று
கட்டி முத்தமிட்டு ஊட்டியது தமிழ்ப்பால் !
தெள்ளிய அறிவு ஊட்டிப்பள் ளியிலாசான்
அள்ளி வழங்கியது வள்ளுவன் முப்பால் !
இப்பாலுக் கப்பால் எப்பால் இனிதோ ?
முப்பால் அருந்திய நான்தருவேன்
தப்பாமல் யாப்பெழில்பால் என்னருந் தமிழே !

----கவின் சாரலன்

படம் : தமிழ்க் கடவுள் முருகன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-15, 10:02 am)
பார்வை : 145

மேலே