தமிழா தாயை காக்க எழு

தூங்கி விழுகின்ற தமிழா
தாயின் நிலையை காண கண் விழிடா
ஆயியின் அழகை குலைத்து
அற்ப வயிறை கழுவும் நிலை தகுமோ
வரலாறு மறந்தோம்
சருகாக காய்கின்றோம்
வீர உணர்வும் மரத்துபோனோம்
அழிவை நோக்கி
மொழியை தள்ளி
பழியை சுமந்து நின்றோம்

புலவர்கள் புனைந்து வைத்த கவிகள்
தமிழ்த்தாயை அழகுபடுத்தும் அழகு தங்க நகைகள்
அழிந்துபோகும் உனக்கு நகையும் வேண்டுமோ
என்று அற்பமாக அடகு வைத்து தின்றோமே

அயலவன் மொழியுடன் கலந்து
தாயின் தூய்மை தமிழன் கெடுக்கின்றான்
அந்நியன் அவன் தன் மொழியை
இன்னும் அழகு குலையாமல் காக்கின்றான்
எண்ணத்து உளியால்
இதயத்தை செதுக்கி
சத்தியம் செய்வோமே
பிச்சை புகினும்
பச்சைத்தமிழனாய் வாழ்வோம் – தாயை
கொச்சைப்படுத்தும் கிறுக்கனின்
மூச்சை நிறுத்த செய்வோம்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (22-Nov-15, 4:44 am)
பார்வை : 209

மேலே