வேறு நிலாக்கள் 43- கவித்தாசபாபதி

பால்யகாலத்து சிநேகிதி
*********************************


இந்தத் தோணி
வெறுமையைச்
சுமந்து
அலைந்துகொண்டிருந்தது

நீ
கீதங்களை
நிரப்பிவிட்டாய்

காலம்
பழசாகிப் போனாலும்
புதுசாகவே தெரியும்
பழைய முகமே

இனிய குடும்பத்தின்
இல்லறம் ஏற்றிச் சென்றாலும்
இனம்புரியா உணர்வுகளின்
ரகசிய தவிப்பில்
இன்றும் அலைகிறது
இந்தத் தோணி
உன் கீதங்களோடு..

ஜனவெள்ளத்தில்
உன்னைத் தேடி...!
உன்னைத் தேடி ...! (1991)


***

(இக்கவிதை தொடருக்கு மட்டுமே ... நூலில் இடம் பெறாது )

("காதலின் பொன் வீதியில்" நூலிலிருந்து )

எழுதியவர் : கவித்தாசபாபதி (24-Nov-15, 1:14 pm)
பார்வை : 90

மேலே