என்ன தான் தவறு செய்தோம் நாங்கள்- ஆனந்தி

உயிரை விதையாக்கி,
உதிரத்தை வேராக்கி,
உழைப்பை மூலமாக்கி,
உடலை வியர்வையாக்கி,
நம்பிக்கை கையுயர்த்தி
உணவை
உற்பத்தியாக்குகிறோம்.

எங்களின் கோலத்தை
காலம் கேலி செய்கிறதோ?

விடாமல் பெய்யும் மழையும்
விட்டு விட்டு வீசும் காற்றும்,
நீண்டு கிடக்கிறது
வயல் வெளி எங்கும்
எங்களின் கனவுகள்
என்பதறியாது.

அண்ட வழியின்றி
மண்டியே கிடக்கிறோம்
பெருங் கூட்டம் தெருவினில்.
வெந்த சோற்றுக்கும்
வழியின்றி...

நிறைந்த கனவெல்லாம்
நீர் கொண்டு போனதுவோ?

கோவில் கொண்ட தெய்வங்கள்
எல்லாம் சிலையாய் சிலைத்தனவோ?

எங்களின் உதிரம்
வழியுது விழியினில்....

உயிர் மூச்சு கேட்கிறோம்
ஏ...வானமே
தவிப்பினை எங்களுக்கு
ஊட்டலாமோ?
மீண்டும் மீண்டும்...

எழுதியவர் : ஆனந்தி.ரா (24-Nov-15, 2:03 pm)
பார்வை : 168

மேலே