சிறுகதை, உன்மை சம்பவம்

இரவு நேரம் இதயத்தில் படபடப்பு, பேரமைதி, பேச்சு மூச்சு இல்லாமல் என் மனைவி, என் குழந்தை, எங்கள் முகத்தில் சொட்டும் இரத்தம், நாங்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது ஏதோ லாரி ஒன்று எங்கள் மீது மோதியது, மோதிய லாரியும் நாங்கள் என்ன ஆனோம் என்று கூட திரும்பி பாராமல் சென்று விட்டது

சாலையில் வருவோர் செல்வோர் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து செல்கின்றனர், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக,


108க்கு அழைத்தேன் 10 நிமிடமானது வரவில்லை திரும்பவும் அழைத்தேன் 15 நிமிடமானது இன்னும் வரவில்லை அரை மணி நேரம் ஆகியும் வரவில்லை

வழியில் செல்லும் வாகனங்களிடம் மருத்துவமனையில் கொண்டு சென்று விடுமாறு காலில் விழாத குறையாக வேண்டினேன் யாரும் நிறுத்தவில்லை வாகனங்களும் நிற்கவில்லை,

கடைசியாக ஒன்று நின்றது, நின்றது வாகனமல்ல என் மனைவியின் உயிர் மூச்சு, கடைசியாக தந்தையே நான் வாழ வேண்டும் என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியவாறே கண்ணில் கண்ணீர் சொட்டிய படி என் குழந்தையும் துடிதுடித்தவாறு மாண்டு போனது,என் கண் முன்னே இருவரும் இறந்தே போனர்,உடல் இருந்தும் உடலில் உயிர் இருந்தும் காக்க முடியாது போனேனே,

இது உன்மையா நடந்த சம்பவம் வாசகர்களே, இதற்கு காரணம் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக வாழ்வதே, நீங்களும் இதே போல் சுயநலமாக வாழாமல் பிறருக்கு தொண்டும், உதவியும் செய்து வாழுங்கள்

எழுதியவர் : விக்னேஷ் (24-Nov-15, 2:04 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 545

மேலே