ஏற்றுக்கொள்வாய் என்று எண்ணி

நேற்றெல்லாம் நீ எனக்கு
நினைவுகளில்
வலம் வந்தாய்.....
ஊற்றுத்தண்ணீர் மேல் உதிக்கும்
வட்ட வட்ட
கோலம் ஆனாய்.....
நாற்றுநடச் சென்ற வேளை
பாட்டாய் வந்து
மனம் நிறைத்தாய்.....
சேற்றில் முளைத்த சிறுபூவாய்
வாசம் தந்து
சுவாசம் தந்தாய்.....
மாற்றம் மெல்ல கொள்ளச்செய்து
மனப் பரப்பில்
பந்தி வைத்தாய்.....
ஏற்றுக் கொள்வாய் என்று எண்ணி
காற்றாய் மாறி
கவிதை சொல்ல.....
காற்றின் இதம் எடுத்துக் கொண்டு
கவிதை மட்டும்
கலைத்து விட்டாய்.....