இறை வெண்பா

உணர்விலே யொன்றிய உள்ஞான போதமாய்
என்னுயிராய் நின்றபொரு ளே

கனலாய்என் னுள்ளே கனன்ற பெருவொளியே
தண்ணளியே தத்து வமே

ஒப்பாரும் மிக்காரும் எக்காலும் போற்றிடுமொப்
பற்றபர மேந லமே - சௌந்தர்

(அன்பு நண்பர்களே, இது எனது முதல் வெண்பா, நண்பர்கள் வாசித்துவிட்டு தங்கள் கருத்துகளை பகிரவும்)

எழுதியவர் : சௌந்தர் (24-Nov-15, 9:36 pm)
பார்வை : 269

மேலே