உயர்ந்தவன்

வந்தவருக்கும்
எனக்கும்
ஒரே வித்தியாசம் ..
நான் ..
அவரல்ல..!

**************

மருந்து அடித்து வைத்திருந்தேன்
கரப்பான் பூச்சிகளுக்காக ..
விதியின் வசத்தால் பல
சுருண்டு கிடந்த காலையில்
ஒன்று மட்டும் ..
ஊசலாடியபடி..!
..
இரண்டொரு சோற்றுப் பருக்கைகள்
அங்கே தூவி வைத்தேன் ..
இந்த மாநிலத்தையோ
ஏன் ..நாட்டையோ கூட
ஆளும் தகுதி எனக்கு
இருப்பதை அறிகிறேன்..!
******************************

எழுதியவர் : பாலகங்காதரன் (25-Nov-15, 8:54 am)
பார்வை : 177

மேலே