யார் மேல் கோபமோ

இயற்கையை நாம்
அழித்தால் ,
இயற்கை நம்மை அழிக்கும் ..

உண்மை தான் ..
தண்ணீருக்காக நாம் தவம்
கிடந்த நாட்கள் போய்,

தண்ணீரிலே நாம் தவம்
கிடக்கும் நாள் வந்தது ...

வெள்ளத்தில் தத்தளிக்கும் ,
மக்களின் வேதனை
சொல்லி மாளாது ...

உயர்வு தாழ்வின்றி ,
சாதி பேதமின்றி , அனைவரையும்
புரட்டி போட்ட
வருண பகவானுக்கு யார் மேல்
என்ன கோபமோ ?

காட்டை அழித்து நாட்டை
பெருக்கியவர் மேல் கோபமோ ?

மரங்களை வெட்டி சாய்த்த
மனிதர்கள் மேல் கோபமா ?

இயற்கை தந்த வளங்களை எல்லாம்
அழிக்க முயன்ற அரக்கர் மேல் கோபமா ?

நிரம்பி நின்ற ஏரி குளங்களை எல்லாம்
தூர் வார மறந்தவர்கள் மேல் கோபமா ?

எவர் மீது கோபம் ?

வெள்ளத்தை அரசியலாக்கும்
வீணர்கள் மேல் கோபமா ?

ஓ வருண பகவானே ...

நீயே பதில் சொல் ...

எழுதியவர் : சாருமதி (25-Nov-15, 12:04 pm)
Tanglish : yaar mel gopamo
பார்வை : 167

மேலே