Thiru kairthikai deepam kavithai

பிரசவ வலி
அந்த திரிக்கும் உண்டு
ஒளிக்கும் உண்டு.

வரிசையாய் கனவுகள்.
படுக்கை
இல்லாமலேயே.

இருக்காஞ்சட்டிகள்
தோறும்
இருதயத்துடிப்புகள்.

காலண்டர் துருப்பிடிக்காமல்
இருக்கவே
இந்த பண்டிகைகள்.

குவிந்து கிடக்கும் அகல் விளக்குகள்
வரிசைப்படுத்த ஆளில்லை.
வானத்து விண்மீன்கள்.

எழுதியவர் : (25-Nov-15, 1:01 pm)
பார்வை : 3512

மேலே