காதல் புத்தக பக்கம் -1 ----முஹம்மத் ஸர்பான்
கண்களை மூடிப்பார்
கவி சொல்ல மாட்டாய்
மண்ணில் நடந்து பார்
தூரம் அறிய மாட்டாய்
***
என் இதயமெனும் அட்சயபாத்திரத்தில்
உன் வெள்ளிக் கொலுசுச்சத்தம்
தினந்தினம் இசையை ஒலிக்கிறது.
நானும் மெட்டுக்கு பாடல் எழுதி கவிஞனாகிறேன்
***
மலர்களே!! நீங்கள் என்னிடம்
உதவி கேட்க வேண்டாம்.
அவள் புன்னகை ஓர் பூகம்பம்
என் கண்களும் அதற்கு நீர் ஊற்றும்
***
முத்தமிழ் இனிக்கும்
உன் மெளனத்தில்
முக்கனியும் கனியும்
என் இதழ் ஓரத்தில்
***
தேவதைக் கூட்டமும் உன்னைக்கண்டு
நட்சத்திரத்தால் மஞ்சள் பூச வந்தனர்.
காதலன் நானோ பாவம்
என் உயிரால் உனக்கு உடையிட வந்தேன்
***
உன் காலடியில்
அலைகள் சுவாசிக்கின்றன.
என் மனதில் காதல்
இலைகள் சருகாய் விழுகின்றன
***
காதல் என்ற சொல்லில்
என்னை ஆளும் மொத்தம்
அவள் புன்னகை முத்தம்
***
கண்களும் அழுகிறது
உன்னை கண்ட நாள் முதல்
நெஞ்சமும் துடிக்கிறது
நீ என்னை விட்டுச் சென்ற நாள் முதல்
***
உன் கைகளில் நான்
வைத்து விட்ட மருதாணி
பூக்கள் கூட என்னை
பார்த்து விண்மீனாய் கண்
சிமிட்டுகிறது
***
இதயத்தின் கீதையில்
நான் எழுதிய காதல்
கவிதையானாள் என் சீதை
***
முகத்திரை பெண்ணிடம்
இல்லாத வெட்கம்
தாவணிப்பெண்ணின்
புருவத்தின் அழகு