சென்ரியூக்கள் 02

கந்துவட்டி
தடைச் சட்டம்
கோயிலில் உண்டியல்

¦
முதன் முதலாக
அம்மா என்றது குழந்தை
வேலைக்காரியைப் பார்த்து

¦
கூந்தலை சரிசெய்தாள் நடிகை
நிமிடத்திற்கு நான்கு முறை
விலக்கிவிட்ட சேலையை மறந்து

¦
கோல் எடுத்தும்
குரங்கு ஆடவில்லை
மருமகள்

¦
வாலாட்டினால்
நன்றியாம்.
தலையாட்டினால் பலியாம்!

எழுதியவர் : (25-Nov-15, 9:04 pm)
பார்வை : 91

மேலே