எதிர் வீட்டு ஜன்னல் 555
அவள்...
எதிர்வீட்டில் ஒரு பூ பூத்தது
எல்லா வண்டுகளும் ஜன்னலிலே...
என் தெருவில்
தங்கதேர் போனது...
எல்லோர் நெஞ்சும்
அதன் பின்னலிலே...
நதியில் குளித்தது ஒரு நிலவு
நட்சத்திரங்கள் நனைந்தன...
கரையில் ஒரு மயில்
கூந்தலை சிக்கெடுத்தது...
ஊர் எல்லாம் வெயில் போய்
இருட்டடித்தது...
அவள் அரண்மனை கண்களை
மூடுகையில்...
கனவுபோய் மனஜன்னல்
திறக்கிறது...
அவள் வாசல் கதவு மீண்டும்
திறக்கையில்தான்...
கனவில் என் வாழ்க்கை
சுகம்கண்டது...
வானவில் தேவதை இதோ
என் எதிர் வீட்டில்.....