அமுத நீர்
ஏரிகளில் ......
வரும் நீரை
வீணாக விட்டு விட்டு
கூரைகளில் ......
கொட்டும் நீரை
மழை நீர் சேகரிப்பு
என்கிறாய் !..
குளம் குட்டைகளில்
கோரைகள் ........
முளைப்பதைவிட
குடிசைகளே -அதிகம்
முளைத்திருக்கின்றன ......
ஆற்று கரையோரத்தில்
அடுக்குமாடி..........
குடியிருப்புகளால்
ஆக்கிரமைப்பு செய்துவிட்டு
நீ ....தங்குவதற்கு
வசதியை செய்துகொண்ட
மனிதா ?
நீர் .....தங்குவதற்கு
என்ன ?........
செய்திருக்கிறாய்
அடுத்தவனிடம் ...........
ஐந்து டி எம் சி
தண்ணீருக்கு
ஆர்ப்பாட்டம் செய்த ..நீ
ஆயிரமாயிரம் டி எம் சி
தண்ணீர்.......
அனாவசியமாக
கடலில் போய்...
கலக்கிறதே ...என்ன ?
செய்துகொண்டிருக்கிறாய் !
நாகரீக ....
வளர்ச்சி என்று
தெருக்களில் ...
அடி பம்புகளை எல்லாம்
அப்புரபடுத்திவிட்டு
குழாய் நீரை இழுத்து
குடிசையில் வைத்துகொண்டு
கும்மாளம் போடுகிறாய்
மனிதா ....? நீ
இயற்கை ...
வளங்களை
இடையூறு செய்துவந்தால்
அடுத்த தலைமுறைகள்
வாழ்க்கை ................
அழிந்துபோய் விடும்