சென்ரியூ 13

தவற்றுக்குப் போய்
கூனிக் குறுகாதே
அரசியல்வாதிகளைப் பார்

¦
பொங்கல் பொங்கியம்
கண்டுபிடிக்கப்பட்டது
மாப்பிள்ளையின் திசை

¦
கருப்பு கொச்சம்
தலைகுனிவுதான்
விற்றுத் தீர்க்கும் முகப்பூச்சுகள்

¦
பணம்
ஈவு இரக்கம் பாராது
கொலைத் தொழில்

¦
சரஸ்வதி கையில்
தங்க வீனைகள்
தனியார் கல்வி நிறுவனங்கள்

எழுதியவர் : ரமேஸ் (25-Nov-15, 9:14 pm)
பார்வை : 74

மேலே