சென்ரியூக்கள்21
அணைப்பதற்கு முன்
அணைந்துவிடுகிறது
மின் விளக்குகள்
¦
பெண் பிடிக்கவில்லை
காரணம் சொன்னால் நகைப்பு
கூந்தல் நீளமில்லை
¦
மழலைச் சொல்
எச்சில்
அமுதம்
¦
தள்ளாடிக் கொண்டே போகிறார்
சுடுகாட்டுப் பாதையில்
இறந்தும் தாத்தா
¦
சொட்டு சொட்டாய் மழை
நிரம்பி வழியும்
குளம்