சென்னயின் இந்த வெள்ளத்துக்கு மிக, மிக முக்கியமான காரணம்

மேல் கண்ட ஏரிகளின் ஆக்கிரமிப்புகள் அரசின் அலட்சியத்தின் மூலம் வந்தது தான் காரணம்.

இதை அப்புறப்படுத்த அரசு முன்வருமா?

சென்னையை விடிய விடிய வடிய வைத்து அடிக்கிறது மழை. நகரின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி (கொள்ளளவு 3.1 டி.எம்.சி), செம்பரம்பாக்கம் (3.3 டி.எம்.சி), புழல் (3.6 டி.எம்.சி), சோழவரம் (0.8 டி.எம்.சி) ஆகிய ஏரிகள் அதிகாரபூர்வமாக திறந்துவிடப்பட்டுள்ளன.

இவை கொசஸ்தலை, அடையாறு வழியாக கடலில் சென்று கலக்கின்றன. அதாவது, குடிநீரை கடலுக்கு
அனுப்பிக்கொண்டிருக்கிறோம்.

இந்த நான்கு ஏரிகளின் வழித் தடத்தில் மட்டும் சுமார் 36 சங்கிலித் தொடர் ஏரிகள் அழிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இவை இல்லாமல் மடிப்பாக்கம், அம்பத்தூர், ரெட்டை ஏரி உள்ளிட்ட பல ஏரிகள் நிரம்பி வழிந்து, அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது.

ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் மக்கள் மாடிகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அடையாறு கரையோரப் பகுதிகள், தாம்பரம், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு அன்றாட உணவே அரிதாகிவிட்டது.


நவம்பர் 2015
ஹிந்து

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (25-Nov-15, 11:44 pm)
பார்வை : 175

மேலே