இவ்வளவுதானா -2

பெரிதென்று எண்ணிய வாழ்க்கை நூலின்
ஒரு முனை நின்றவனும் மறுமுனை
நாடியே பயணம் செய்த காலை
நெடு வழிப் பயணம் நேரத்
தோன்றின ..தோன்றிய காண்:

ஒரூரின் எல்லைதனில் பாவையொருத்தி
உதிரத்தில் சூலாகி வருந்தி வளர்ந்து
உறுகாலமதில் கைப்பாலனாய் பிறந்து
வளர்ந்து காளையாகி தனக்கொப்பானவோர்
மணஞ்செய்து ஒருமையாகி நிலந்தன் மேல்
மனமுமுயிரும் முதலாயெங்கும் சித்தமும்
சீவனும் ஒன்றுபட்டு இல்லறமே நடத்தி வந்து
தன் குலம் விளங்க மகவுகள் தமை ஈன்று
பொருள் ஈட்டி பெரும் பேரும் புகழும் பெற்றிடவே
வேடங்கள் பல புனைந்து வாழ்ந்து நரை பெருகி
திரைகள் கூடி கிழப் பருவம் எய்தினானே!

மனையாளும், மகவுகளும், சுற்றமும் நட்பும்
அத்துனை பேர்களுமே யொருநாள்
காலன் மாய்ப்பது காண சந்ததம்
வாய்விட்டலறி ஏகனா யிருக்க வெண்ணாது
பெரு வீடடையும் வழியை நாடி பிரிந்து சென்றானே!

(வளரும்)

எழுதியவர் : பாலகங்காதரன் (26-Nov-15, 9:06 am)
பார்வை : 103

மேலே