இலண்டன் ரெயினோரம்

அந்த அகலத்தெரு
விண்மீனை தின்று
கக்கிக் கொண்ட வெளிச்சத்தில்
உறுமி விரையும் ரெயினோரம்
இரட்டை கிழவியாய்
தக தக வென
உருண்டோடிய சில்மிஷங்கள்
குளிரை குடித்த குளிரூட்டிகள்
குமரா இளசா
ஆணா பெண்ணா
எதுவும் விளங்காத வெள்ளோட்டம்
விழிகள் பிதுங்கி
வெளிவர எத்தனித்து
எஸ்கலேட்டர் ஏற இறங்க
தடக்கி படி தாண்டி
நிலக்கீழ் ரயில் பாதை
நிரம்பி வழிய
வரை படம் விழிகளை
விழித்து திணறடிக்க
ஒன்றில் ஏறி
இன்னொன்றில் தாவி
விளங்காத வே அவுட் இல்
வெளியேறி
ஒற்றைக்கு இரட்டையாய்
பவுண்ஸ் போட்டு
ஓய்ச்டெர் காட்டை நிரப்பி
தடைதாண்டி தடக்கி வீழ்ந்து
இரட்டை தட்டு பஸ்
முக்கித் தக்கி முன்னால் ஏறி. ..
திரைப்படமானது தேரோட்டம்
தன்னந்தனிமையில்
ஒரு வெள்ளோட்டம்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (26-Nov-15, 12:18 pm)
பார்வை : 57

மேலே