பட்டமளிப்பு

நத்தையாய் நகர்ந்த
பட்டினிப் போர்
அவளுக்குள் ஓர் உயிர்
உயிருக்குள் ஓர் உயிர்
விசமத்தனமாய்
எட்டி உதைக்கும் விரல்களை
தடவி ஒத்தடமிட்டு ....
கன்னி கழியாக் காலைகள்
மொய்க்காத பூவிதழ்கள்
உறிஞ்சாத வண்டினங்கள்
வண்ணத்தின் பூச்சி நினைவுகள்
குமட்டல்கள் வாந்திகள்
கையேந்தல்கள் தடவல்கள்
எண்ணக் கொப்பளிப்புக்கள்
எல்லாமே கைது கொள்ளும்
காந்தங்கள்
சுரக்காத சுரங்கங்கள்
இரக்கும் மலை ஊற்றுக்கள்
வண்ண மலர்வுகள்
உயிர்ப்பூ மீண்டு. .....
மீண்டும் உயிர்த்தெழும்
முளையவள். ....
முகம் நனைய
நுகம் வனைய
இடுப்பொடிய
இளமை இறக்க
இனிமை துறக்க
பார்ப்பவர் பார்வையில்
பரிதாபம் தொனிக்க
உதரம் இறுக்க
உணவு சிறுக்க
விழிகள் விழிக்க
இரவுகள் துடிக்க
எண்ணச் சிதறலில்
இனியதோர்
பட்டமளிப்பு நடந்தேறுகிறது
"தாய் " மை அவள் ....
"தந்தை " மை அவன். ..

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (26-Nov-15, 12:29 pm)
சேர்த்தது : தமிழ் உதயா
பார்வை : 146

மேலே