கல்லூரிப் பயணம் -1

என்ன படித்தோம்
ஏன் படித்தோம்
என்றரியா குமரப் பருவம்
இன்று விட்டு போனதாய்
எண்ணுகின்ற இளமைப் பருவம்.....

கட்டாயத் தேர்ச்சி என்றே
கடந்து வந்த வேளையில்
கட்டுண்டதாய் கண்டதொரு
பொதுத் தேர்வு அதுவே பள்ளிப்
பருவத்தில் இறுதித் தேர்வு.........

இரவெல்லாம் கண்விழித்து
தெருவிளக்கில் தினம் படித்து.......

என் விதியே இதுவென்று
இறைவனடி தவமிருந்து..........

தான் பட்ட பாட்டுக்காய்
இல்லாமல் போனாலும் –தன்
தாய் தந்தை பாட்டுக்காய்
வரம் ஒன்று கிட்டியதாய்
தேர்வில் கிடைத்த தேர்ச்சி
இன்று துவக்கி வைக்கிறது –என்
கல்லூரிப் பயணத்தை.........

-தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (26-Nov-15, 11:18 am)
பார்வை : 82

மேலே