நான்- ஆனந்தி
நான் என்பது
மனமா?
உடலா?
உயிரா?
சிந்தனையா?
செயலா?
பெயரா?
ஆன்மாவா?
அகங்காரமா?
எது?
பதில் சொல்லிட
இயலுமா?
இருட்டுக்குள்
தேடும்
பொருளா?
இருளே தேடிடும்
பொருளா?
ஒவ்வொரு
அணுவிலும்
நிறைந்து
வழிகிறதே நான்.
ஆரம்பமும்
முடிவும் அற்றதா?
வானத்து விண்மீனா?
நிர்மூலமாக்கும்
தகர்தெறியும்
பூமியின் வெடி வைத்த
பாறையா?
எது மார்க்கமோ
நான் என்பதை
உணர்ந்திட.
என் புத்தியில்
சட்டென உரைக்கிறது
ஓர் யுக்தி.
நான் என்பது
பிரபஞ்சத்தின் ஓர்
அணுவாயிருக்கலாம்.
நாம் என்பது
பிரபஞ்சத்தின்
ஓர் புள்ளியாயிருக்கலாம்.....