ஓசை

அடிக்கும் காற்றில் ஓசை உண்டு .
ஆர்க்கும் கடலில் ஓசை உண்டு .
இயற்கை எழிலில் ஓசை உண்டு .
ஈர்ப்பின் விசையில் ஓசை உண்டு .
உழைப்பவர் மனத்தில் ஓசை உண்டு .
ஊரெங்கும் வெடிகள் ஓசை உண்டு .
எழுதும் எழுத்தில் ஓசை உண்டு .
ஏழையின் வயிற்றில் ஓசை உண்டு .
ஐந்திணை சேர்ந்திடில் ஓசை உண்டு
ஒன்றும் கைகளில் ஓசை உண்டு .
ஓதும் மறைகளில் ஓசை உண்டு .
ஒளவை பாட்டில் ஓசை உண்டு .
எஃகின் சுழற்சியில் ஓசை உண்டு .
எங்கும் எதிலும் ஓசை உண்டு .
அகரம் முதல் ஒளடதம் வரையிலும்
அனைத்தும் உயிர்களிலும் ஓசை உண்டு .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Nov-15, 5:13 pm)
Tanglish : oosai
பார்வை : 60

மேலே