பெண்

செயற்கை முகப்பூச்சு கெடுதல்
என்று சொல்லும் அம்மா இன்னும்
கொஞ்சம் பவுடர் போட்டுக்கொள்ள சொன்னாள்

கல்லூரிக்கு செல்ல ஒரு உடை கெஞ்சி
கேட்டாலும் தர மறுத்த அக்கா அவள் புடவையை
ஆசை ஆசையை கட்டி விட்டாள்

ஒரு வேலையும் செய்யாத தம்பி
கூட நாற்காலிகளை வரிசைப்படுத்துகிறான்!

சித்தி அத்தை என்று ஆளுக்கு ஒருமுறை
அலங்காரத்தை சரி செய்கின்றனர்.

கடவுளை கும்பிட்டவாறே வாசலுக்கும்
வீட்டிற்கும் நடை போட்டார் அப்பா

ஒரே ஒரு பெண் மட்டும்
பங்கேற்கும் அழகி போட்டி!
பெண் பார்க்கும் நிகழ்ச்சி

எழுதியவர் : aysha (26-Nov-15, 6:06 pm)
Tanglish : pen
பார்வை : 196

மேலே